அதிஷ்டகார செல்லம் திருவாளர் பப்பி

சிலியில் கடந்த 27ம் திகதி 8.8 மக்னிரியுட் அளவில் பதிவான பாரிய பூகம்பம், அதன் பின்னரான சுனாமி அலைகள் என்பன மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதோடு, இதுவரையான கணக்கெடுப்புக்களின் படி 708 உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. சுமார் 500,000 வீடுகள் மற்றும் கட்டடங்கள் நிர்மூலமாகியிருக்கின்றன.

இது இவ்வாறு இருக்க மீட்புப்பணிகளும் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தவேளையில் தான் இன்று, அதிஷ்டகார செல்லக் குட்டியார் மீட்புப் பணியாளர்களின் கண்ணில் பட்டிருக்கின்றார்.

இடிந்து விழுந்த மிகப் பெரிய தொடர்மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய பப்பியார்.. வட, தென் அமெரிக்க ஊடகங்களில் தலைப்புச் செய்திக இருக்கின்றார்.

பாருங்கோவன் அவரின்ர கண்ணில் இருக்கின்ற நன்றியும், திகைப்பும் களைப்புமான தேகமும்..

Comments

Popular posts from this blog

நதி

கதவைத்திற கமாரா வரும்

அல்கா அஜித்