Posts

Showing posts with the label Sivanyonline

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

Image
சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது பாடலின் மெட்டு  எம்மை வசீகரிக்க வைப்பதோடு அதன் கவிநயத்தையும் சேர்த்து ரசிக்க வைப்பது என்பது கவிஞரின் கையில் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர்  போன்றவர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. ஏனெனில் பாடல் வரி நன்றாக இருந்தாலும் இசை அதனை மேவினால் ,அல்லது ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலோ இல்லையெனில் பாடகர்கள் சரியாக உச்சரிக்காமலோ இருந்தால் எப்படி பாடல் வரிகளை ரசிப்பது? எனவே அனைத்து விடயங்களும் ஒன்றுகூடியதாக இருக்கும் பாடல்களில் பல விந்தைகளைப் பாடலாசிரியர்கள் படைத்திருக்கின்றார்கள். மதன் கார்க்கி இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நன்மை. ஏனெனில் மிகவும் அழகாகவும் , வித்தியசமாகவும் ,புதுமை நிறைந்த வகையிலலும் எழுதுவது மட்டுமல்ல தமிழ் , தொழில்நுட்பம் , பொறியியல் . விஞ்ஞானம் எனப் பல விடயங்களையும் மக்கள் ரசனையையும் எழுத்துக்குள் கொண்டுவரத் தெரிந்தவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் விட எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை அவரது செவ்விகளிலிருந்து அறிய முடிகின்றது.  காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இவரின் ஒரு பாடல் 'அழைப்பாயா அழைப்...