தலைய புதுப்பிக்கபோறாராம் கௌதம்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்து இருக்கிறேன் என்று கூறுகின்றார் கௌதம்..... உண்மையாவா...இப்பிடியெல்லாம் சொல்லப்படாது...

படம் பார்த்த அத்தனை பேரும், எங்க வாழ்க்கையில் நடந்த மாதிரி இருக்கிறது என்கிறார்கள் (அப்ப பார்க்காதவங்க என்ன மாதிரி..). அத்தோட, இந்த படம் நான் சந்தித்த இரண்டு பேரின் கதை. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் யார்? என்று சொல்ல மாட்டேன். சொன்னால், பிரச்னை ஆகிவிடும். (ஆக இந்தமுறை இங்கிலிஷ் படத்த சுடல்ல... அந்த ரெண்டு பேருக்கும் இந்த விசயம் தெரியுமோ....)

அந்த காதலர்களின் கதைக்குள், என் கற்பனையையும் சேர்த்து படமாக்கி இருக்கிறேன்.

என் அடுத்த படத்தில் அஜீத் நாயகன் (அட நம்ம கொல சீ.. தல) தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். அதையடுத்து, சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன்.

ஹாரீஸ் ஜெயராஜுடன் மீண்டும் இணையும் எண்ணம் இல்லை. (அப்ப விஜய் TV Award Function ல பொய் சொல்லியிருக்கிறிங்க ரெண்டு போரும்)

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு வேறு மாதிரி தெரிந்தது போல், என் அடுத்த படத்தில் வேறு ஒரு அஜீத் வெளிப்படுவார் என்றார். (பார்த்து படம் கொலையில முடியப்போகுது, ஏற்கனவே நாங்க ஆழ்வார்லயே வேற அஜித்தெல்லாம் பார்த்தாச்சி பார்த்தாச்சி)

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்