Posts

Showing posts from February, 2010

பெப்ரவரி 29, 2010

Image
பெப்ரவரி 29 இல் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் பிறந்த தினம் வராது அவர்களுக்கு எமது வாழ்துக்கள்

பெப்ரவரி 29ல் பிறந்த இந்த இரண்டு பிரபல்யங்களும் ஒரே காலப்பகுதியில் இந்தியாவின் பிரதமர் மற்றும் ஜகாதிபதியாக இருந்திருக்க வேண்டியவர்கள், ஆனால் அது நடைபெறவில்லை..

மொரார்ஜி தேசாய்
6வது இந்தியப் பிரதமர் (1977-1979)

பிறப்பு: பிப்ரவரி 29, 1896, பாதிலி, மும்பை
இறப்பு: ஏப்ரல் 10, 1995

ருக்மிணி தேவி அருண்டேல்
நடனக் கலைஞர்
பிறப்பு: பெப்ரவரி 29, 1904, மதுரை
இறப்பு: பெப்ரவரி 24, 1986

கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர்
சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார்.

அல்கா அஜித்

Image
விஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித் பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ.... Song By Alka Ajith

ஓம் சச்சினே நமக.. எல்லாரும் ஆசிர்வாதம் வாங்குங்கோ

Image
சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தாலும் அடித்தார் ஆளாளுக்கு சச்சினை புகழ்து தள்ளுகிறார்கள்...

இரண்டு நாட்களுக்கு முன்னர் கவஸ்கர்; சச்சின்  நிகழ்த்தியுள்ள உலக சாதனையைப் பார்த்ததும் அவரது காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது என்று ரொம்பவே உணர்ச்சிசப்பட்டுள்ளார்.

இப்ப இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த்; சச்சின்  டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள் என்று புளகாங்கிதப்பட்டு கூறியுள்ளார்

உண்மையில் சச்சின் டெண்டுல்கரின் தொடர் சாதனைகளுக்கு, அவரது பணிவும், தன்னம்பிக்கையும், ஆர்வமும் தான் காரணம்.

ஆனால் போகிற போக்கில் அவரை சச்சின் சுவாமியாக மாற்றி கோவில் கட்டி குப்பாபிஷேகம் நடத்தி விடுவார்கள் போல் அல்லவா இருக்கின்றது.?

Please  சச்சின் அடிக்கிறத இன்னும் கொஞ்ச நாளைக்கு நாங்கள் எல்லாம் பார்க்கணும்

சிலியில் பாரிய பூகம்பம்: 8.8 Magnitude பசிபிக் கடலில் சுனாமி எச்சரிக்கை

Image
தென் அமெரிக்க நாடான சிலி அருகே பசிபிக் பெருங்கடலில்  ரி்க்டர் அளவுகோளில் 8.8 புள்ளிகளாகப் பதிவான பரிய நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலி, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் சுனாமி அலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு ஜப்பான் புவியியல் மையம் எச்சரித்துள்ளது.

இதுவரை (27 பெப்: 10.12 AM) சிலியில் 88 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உயிர்ப் பலி மிக அதிகமாக இருக்கும் என்று சிலியின் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி முழுவதும் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுவிட்டதால் சர்வதேச விமான நிலையம் உள்பட சிலியின் பெரும்பாலான விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகியிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

1.5 மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் உருவாகி தென் அமெரிக்காவுக்கு வடக்கிலும் தெற்கிலுமாக மணிக்கு 800 கி.மீ.…

PICK ME மற்றது KICK ME

Image
இந்த Pick me மற்றது Kick me க்கெல்லாம் நான் வேற வேற அர்த்தம் என்று நினைச்சிருந்தன் .... இந்த வீடியோவை பாருங்க என்ன அர்த்தம் என்று
உங்களுக்கே விளங்கும்
VIDEO
ஏண்டா..... இப்பிடி... (வடிவேலு மாதிரி சொல்லிப்பாருங்க)

ஓரம்போ ஓரம்போ தேர்தல் வண்டிவருது....

Image
நாடாளுமன்றத் தேர்தல் 2010
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 8ம் திகதி - (நடத்துங்க)
தேர்தல் மாவட்டங்கள் - 22 (சொல்லவேயில்ல)
அரசியல் கட்சிகள் - 24 (என்னத்துக்கு)
சுயேட்சைக் குழுக்கள் - 310 ( ஏன்டா ஏன்)
தேர்தல் மூலம் தெரிவு - 196  (மெய்யாலுமா)
மனுத்தாக்கல் - 7358 பேர் (உங்கள பற்றி பேஸ்மாட்டன்)

இனி ஏன் சுணக்கம் கிளப்புங்கள் வண்டிகளையும்.. உங்கள் அல்லக்கை நொள்ளக்கைகளையும்...

உங்கள் வோட்டு எரும மாட்டு சின்னத்திற்கு

சாதனை படைக்கும் ஆப்தரக்ஷகா (சந்திரமுகி II)

Image
பி.வாசுவின் ஆப்தமித்ராவின் (சந்திரமுகி) இரண்டாம் பாகத்தை 'ஆப்தரக்ஷகா' என்னும் பெயரில் பி.வாசு இயக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திலும் மறைந்த விஷ்ணுவர்தன்தான் நாயகன். கடந்த 19-ம் தேதி கர்நாடகாவில் வெளியான ஆப்தரக்ஷகா பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
ஆப்தரக்ஷகா பற்றி பி.வாசு
"ஆப்தரக்ஷகா-2" படத்துக்கு கன்னடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனை தமிழில் இயக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் இருக்கிறேன். படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினி அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
நாம பாடத்தப் பார்த்திட்டு கருத்துச்சொல்லுவம்...

விண்ணைத்தாண்டி வருவாயா : வருமா வராதா??

Image
A different Love Story Yet Again இதுதான் அறிமுகம்

சிம்புவின் வழமையான சமாசாரம் ஒன்றும் படத்தில் இல்லை என்றாலும் படத்தைப் பார்க்க அதைவிட இரண்டு மடங்கு பொறுமை, உங்களுக்கு இருக்கா இல்லையா?

படத்தின் முதல் பாதி போர் அடிக்காம போறமாதிரித்தான் இருக்கு... ஆனா Interverl க்கு பிறகு நிச்சயமா சோதனை முயற்சிதான், படத்திற்கா உங்களுக்கா என்று நிங்கதான் சொல்லவேண்டும்..

எப்போ நடந்ததுனு தெரியல..BUT AM IN LOVE WITH YOU' என்ற வசனம் இந்தப்படத்திலயும் இருக்கு... கொளதம் வாசுதேவ மேனன்.. போதும் இந்த வசனத்த நிப்பாட்டுங்க..

சரி இதையும் கேளுங்க படத்தில் சிம்பு த்ரிஷாவை அடிக்கடி கட்டிப்பிடிக்கின்றார்...... போய்ப்பாருங்க ஏன் என்டு தெரியம்...

சிறப்பு: கொளதம் வாசுதேவ மேனன் ஹரிஸ் ஜெயராஜை விட்டுவிட்டு ரகுமானுடன் சேர்ந்திருப்பது.

படத்தில்
Gowtham Vaasudeva Menan : Director
A.R.Rahman : Music
Manoj Paramahamsha: Photography
Thamarai: Lyrics (Gowthm's favorite)
Antony: Editing
Rajeevan :Art
Nalini shriram : Costume 
+
Simbu, Thrisha


இவ்வளவு பேர் இருந்துதம் என் சொ_ _ _ _ _ க (இடைவெளியை நீங்களே நிரப்புங்க)

ஷாருக்கானின் உலக மகா லட்சியம்

Image
ட்விட்டரின் (Twitter) பின்தொடருவோர் எண்ணிக்கையில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசிதரூரை மிஞ்ச வேண்டும் என்பது தான் ஷாருக் கானின் தற்போதைய லட்சியமாம்.

ட்விட்டர் சமூக வலையமைப்பு சேவையில் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் தான் இணைந்தார். அவரின் நண்பர் இயக்குநர் கரண் ஜோகர் மூலம் இந்த வலையமைப்பில் சேர்ந்தார் ஷாருக்கான். (இப்பதான் இவருக்கு தெரிஞ்சிருக்கு)

ட்விட்டருக்குள் நுழைந்த 40 நாட்களுக்கு உள்ளாகவே சுமார் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 565 பின்தொடருவோரை (Followers) பெற்று விட்டார்.

ஆனால், வெளியுறவுத் துறை இணை அமைச்சரான சசிதரூர் 6 லட்சத்து 61 ஆயிரத்து 456 பின்தொடருவோரை கொண்டுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் தான் சசி தரூரை விட அதிக பெற்றுவிடுவேன் என ஷாருக்கான் கூறியுள்ளார்.

ரொம்பமுக்கியம், ஆரோக்கியமான போட்டி என்று ஷாருக்கானுக்கு நினைப்பு?சசி தருர் ஆரோக்கியமான விடயங்களை சொல்க்கொண்டு இருக்கிறாரு, நீங்க என்ன சொல்லுவீங்க Mr. ஷாருக். என்னோட படத்தை பாருங்க, அதுவும் தியேட்டருக்கு போய்பாருங்க என்று சொல்லுவீங்க..

ஒன்று நிச்சயம் கட்டவுட்டுக்கு பாலூட்டி மன்னிக்கவும் பாலூத்தி மாலைபோடும் ரசிகர்கள் இருக்கும் வரைக்கு…

அண்டக்காக்கா பனைமரத்துக்கு மேலாக பறக்க பனம்பழங்கள் அனைத்தும் கீழே விழுந்ததாம்

Image
ரஜினி-அஜீத் துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன் தெரிவித்துள்ளார்.

ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.

'எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.

கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்கு வதை ஏற்க மாட்டோம்.

கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்..…

கிருஷ்ணா கிருஷ்ணா... உங்களுக்கு பிடித்த பாடல் எது

Image
மொடல் அழகி பத்மலட்சுமிக்கு பெண்குழந்தை  பிறந்துள்ளது. சென்னையில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இவர் யார் என்று பெரிசா ஒன்றம் யோசிக்க வேண்டாம்.

பிரபல சர்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைத் திருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பம் நடத்தியவர் பத்மலட்சுமி. இதற்கு முன்பு நிர்வாணமாக போஸ் மற்றும் பேட்டிகள் கொடுத்து அதகளம் பண்ணியவர்.

2007ம் ஆண்டு சல்மான் ருஷ்டியிடமிருந்து விவாகரத்து பெற்ற பத்மலட்சுமி, 2009ம் ஆண்டு கர்ப்பமடைந்தார் (பார்ரா..). கொஞ்சநாள் இதனை மறைத்து வைத்துப்பார்த்தார் பத்து (கத்தரிக்காய் முத்திப்போச்சு) கடந்த அக்டோபர் மாதம்தான் வெளியில் சொன்னார் (சொல்ல வேண்டிய கட்டாயம்)

இந்த நிலையில் பிப்ரவரி 20ம் தேதி இவருக்கு நியூயோர்க் நகரில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டியுள்ள பத்மலட்சுமி, திரும்பவும் அதிரடி பண்ணுகிறார்.... அதுதான் குழந்தையின் தந்தையின் பெயரை மட்டும் சொல்லவே மாட்டேன் என்கிறார்...

கிருஷ்ணா கிருஷ்ணா... உங்களுக்கு பிடித்த பாடல் எது??
>>>>>>>>அப்பன் பேர கேட்டவன் யாரு?.....

இலங்கை அரசியல் அரங்கேற்றம் 2010

Image
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறதென சம்பந்தனிடம் கேட்ட போது இதற்குப் பதிலளித்த அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் விநாயகமூர்த்தி தமது பட்டியலில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
*** சம்பந்தருக்கு மீசையில்லை, அதனால் மண்ணும் ஒட்டாது
*************


எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் யாழ் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட இருக்கிறது
*** அடங்காத் தமிழன்
*************


எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கருணாவிற்குப் பொருத்தமான பதவியொன்றைத் தருவதாக மகிந்த றாஜபக்ச உறுதியளித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*** அப்பாடா இது போதும், இனி நிம்மதியா நித்திரை வரும்
*************


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எதிர்ப்பு
*** எங்காவது ஒரு இடத்தில் நிலையா இருங்கப்பா
*************


ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் …

மீண்டும் இணையும் கமல்ஹாசன் மாதவன்

Image
யாவரும் கேளிர் படத்தில் கமல்ஹாசனுடன் மாதவனும் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் சேர்ந்து அன்பே சிவம் என்ற படத்தில் நடித்திருந்தனர். 
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல், த்ரிஷா நடிக்கவிருக்கும் படம் யாவரும் கேளிர். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறார். முழு நீள நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகிறது. 
இந்தியில் தீன் பத்தி, தனு வெட்ஸ் மனு, சன்கிளாஸ் படங்களில் மாதவன் நடித்து வருகிறார். குரு என் ஆளு படத்துக்கு பின் தமிழில் அவர் நடிக்கவுள்ள படம் யாவரும் கேளிர். 
மீண்டும் மற்றுமொரு நகைச்சுவை சரவெடிக்கு உத்தரவாதம் என்று நம்மலாமா... ஏனென்றால் K.S.ரவிக்குமாரின் அண்மைய படங்கள் 'ஆதவன்' மற்றும் 'ஜக்குபாய்' உண்மையில் அச்சுறுத்திவிட்டது. 

2010 ம் ஆண்டு ஒஸ்கார் விருதுகள் சுவாரசியம்

Image
2010 ம் ஆண்டு ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இன்னும் 10 நாட்களில் அதாவது மார்ச் 7ம் திகதி வழங்கப்படவிருக்கின்றது. கடந்த வருடம் ஒஸ்கார் விருதுகள் பற்றி பெரும்பாலும் சகல தமிழர்களும் அறிந்திருந்தார்கள் என்று தான் கூறவேண்டும் ஏனென்றால் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஹோலிவூட் திரைப்படமான ஸ்லம்டோக் (Slumdog Millionaire) மில்லியனர் திரப்படத்திற்கு இசையமைத்து, இரண்டு ஒஸ்கார் விருதுகளைப்ப பெற்றிருந்தார், அது பின்னணி இசைக்கும், அத்திரைப்ப் பாடலான ஜெய்ஹோவிற்கு (Jaiho) சிறந்த பாடலுக்குமான விருதும் வழங்கப்பட்டது.

ஆனால் இவ்வருடம் ஒஸ்கார் விருது வழங்கும் விழா மற்றுமொரு வகையில் சிறப்புறப் போகின்றது. இம்முறை கடும் போட்டி 'அவதார்' (Avatar) மற்றும் 'த ஹேட் லொக்கர்' (The Hurt Locker)என்ற திiரைப்படங்களுக்கிடையில் இருக்கின்றது. இந்த இரண்டு திரைப்படங்கள் என்று சொல்வதிலும் பார்க்க இத் திரைப்படங்களின் இயக்குனர்களான ஜேம்ஸ் கமரூன் (James Camaron) மற்றும் கதரீன் (Kathryn)ஆகியோருக்கிடையில் நிலவும் போட்டிதான் கடும் சுவாரசியமானது. ஏனென்றால் ஜேம்ஸ் கமரூனின் முன்னாள் மனைவிகளுள் ஒருவர் தான் இந்த கத…

வன்கூவரில் நடந்து கொண்டிருக்கும் குளிர்கால ஒலிப்பிக் 2010, இந்திய நடனமாடும் அமெரிக்க ஜோடி

Image
வன்கூவரில் நடந்து கொண்டிருக்கும் குளிர்கால ஒலிப்பிக் 2010 இல் நேற்றுமுன்தினம் நடந்த ஐஸ் நடனத்தில் (Ice Dance) கனேடிய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. வெள்ளிப் பதக்கம் அமெரிக்க ஜோடிக்கு கிடைத்தது. இதில் முக்கிமான விடம் என்னவென்றால், வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்க ஜோடி தங்களது போட்டியின் ஒரு சுற்றில் ஹிந்திப் பாடல்களை தெரிந்தெடுத்து அதற்கு நடனம் ஆடியது அற்புதமாக இருந்தது என்று சொல்வதிலும் பார்க்க மிகப் பிரமாண்டமாக இருந்தது என்று சொல்லலாம்.

ஆட்டத்தில் தொடரும் ஜோடி இந்தியன் கிராமிய நடனம் (Folk Dance)ஆடப்போகின்றார்கள் என்று அறிவித்தல் வந்த பின்பு, அந்த ஜோடி உண்மையில் தேவதாஸ் ஹிந்தித் திரைப்பரட்தில் இருந்து ஷிரேயா ஹோசலின் இரண்டு பாடல்களுக்கு பரத நாட்டிய அசைவுகளைப் போல் ஆடியது, கிராபிக்ஸ்சா அல்லது நிஜமா என்று நம்ப முடியாமல் இருந்நது. மற்றுமொரு சிறப்பம்சம் அந்த அமெரிக்க ஜோடி இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்திருந்தது. சரி சரி இன்னம் நான் ஒன்றும் விளக்கம் செல்லவில்ல நீங்களே வீடியோவை பாருங்க...
Video

200 ரன்கள் - சச்சின் ஒரு நாள் போட்டிகளில் புதிய உலக சாதனை

Image
குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

முதலில், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன்னான 194 என்ற இலக்கைத் தாண்டி புதிய சாதனை படைத்தார் சச்சின்.

அதைத் தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் இரட்டை சதத்தையும் தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.

147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.