Sunday, May 9, 2010

அன்னையர் தினம்


உலகில் எதற்கும் ஈடிணை அற்றது அன்னையின் அன்பு ......
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Saturday, May 8, 2010

சுறா

விஜயின் 50வது திடைப்படம் சுறா. 50வது திடைப்படம் என்றவுடன் எதிர்பார்ப்பு வைத்தது எமது பிழை . என்ன நினைத்து படம் எடுக்கின்றார்களோ தெரியவில்லை . விஜய் நடித்தால் படம் ஓடும் என்று நம்பி எத்தனை நாளுக்குத்தான் படம் எடுப்பார்களோ ?

பொதுவாக நல்ல படங்கள் வருவதை விஜய் போன்ற நடிகர்கள் கவனிப்பதில்லையா..... இல்லை கண்டும் காணாமல் இருக்கின்றார்களா....கதாநாயகன் என்றால் என்ன என்றாவது தெரியுமா ......

மொத்தத்தில் சுறா படத்தில்
"வடிவேல் மட்டும் இல்லையென்றால் சுறாவை பூனை தூக்கிக்கொண்டு போயிருக்கும்" 
வடிவேலும் எவ்வளவுக்குத்தான் தாக்குப்பிடிப்பது ..... அது தான் சுறாவை பூனை தூக்காமல் இருக்க ரசிகர்கள் பால் பாலா வார்க்கிறார்களோ என்னவோ ......

Wednesday, April 28, 2010

நதி

நதி எங்கே போகிறது கடலைத் தேடி....என்ற வரி எமது வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் நதி போல் இருக்க வேண்டும். நதியின் செயற்பாட்டைப் பார்த்தால், அதன் இலக்கு கடலைச்சென்றடைவதுதான். நதி கடலைச்சென்றடையும் வரை என்னென்ன தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து கடலைச் சென்றடைகின்றது.. அந்நதி எவ்வாறு தனது குறிக்கோளில் கவனமாக இருந்து இலக்கை அடைகின்றது. இலகு  பொருட்களை  அடித்துச் சென்றுவிடுகின்றது, வலிமையன பொருட்கள் எனின் அதைவிட்டு விலகி வளைந்தோடுகின்றது அல்லது மேவிப்பாய்கின்றது. இது எமது இலட்சியங்களை அடைவதற்கு எடுத்துக்காட்டு. அதேவேளை செல்லும் வழியில் தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் வழங்கிச் செல்கின்றது. அத்தோடு தன்னுள் பல உயிரினங்களையும் வாழ வைக்கின்றது. அதுபோலவே நாமும் இலக்கை அடையும் மட்டும் முயற்சி செய்து நம்மால் இயன்ற நன்மைகளையும மற்றவர்களுக்கு செய்தால் வாழ்வு செழுமையாக அமையும்

Saturday, April 10, 2010

அழகு.....

குழந்தைகள் என்றாலே அழகுதான்......மனிதக் குழந்தைகள் மட்டுமல்ல .... உயிரினங்கள் எல்லாவற்றின் சிறிய பருவமும் மிக அழகானது என்பதற்கு இந்த ஒளிப்பதிவு எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது....

Wednesday, March 17, 2010

ஆப்பு வைச்சுப்புட்டாங்க அண்ணே

இன்றைய மனிதர்களின் மூன்றாவது கைக்கு அதுதாங்க.. Cell Phone களால் அதிக கதிர் வீச்சு வெளிப்படுவதாகவும், அது உடம்புக்கு கேடு விளைவிப்பதாகவும் அவ்வப்போது அறிக்கைகள் வரும், உடனே Cell Phone Company குய்யோ முய்யோ என்று கத்தி அவ்வாறு இல்லை என்று வாதாடுவதேடு, Court Case என்று கொஞ்ச நாள் சலசலப்பை உண்டாக்கி பின்னர் புஸ்வாணமாகி விடுகின்றது.

இப்ப என்னாண்ணா அமெரிக்காவை சேர்ந்த இவங்க Environmental Working Group (இவங்களுக்கு என்ன கொலை வெறியோ...)சொல்றாங்க படத்தில இருக்கின்ற பய புள்ளைங்க Dangers பார்ட்டியாம்... பய புள்ளையளுக்கு சனி மாற்றம் சரியில்ல போல..

Ordered by tech expert rank. View by radiation level

Tuesday, March 16, 2010

Mr நாட்டாமை Please STOP ப்பு

நல்லா கெளப்புறாரு பீதிய....

நடிக்க வந்ததிலிருந்தே ஒஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது. (நல்லா கனவு காணுங்க யாரு வேணாண்ணு சொன்னது)

எப்படியாவது ஒஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று. (நல்லா தேர்ந்தெடுங்க 1977, ஜக்குபாய் மாதிரி)

நம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த விருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார்.

இப்போது நான் பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் (முதல்ல வாய்ப்பு வரட்டும்) பண்ணுவேன். நிச்சயம் ஒஸ்கர் வெல்வேன்.... ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா........

ஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஒஸ்கர் வெல்லலாம்.

Mr நாட்டாமை Please STOP ப்பு...இதென்ன சின்னப்புள்ளத்தமா இருக்கு....

ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் Hollywood படம் ஒன்றில அமெரிக்க காரன விட திறைமைசாலியா Perform பண்ணி ஒஸ்கார் வாங்கியிருக்காங்க, ஆனா நீங்க என்னடான்னா.. ஒஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தான் அந்த விருதினை கொடுக்கிற மாதிரியும், ஏதோ பொடி நடையாபோய் அந்த விருத வாங்கிட்டு வாற மாதிரியும் கத விடுறீங்க....

ஒஸ்கார் அமெரிக்க படங்களுக்கு, அமெரிக்கன் கொடுக்கிற விருது... இதத்தான் கமல் காலா காலமா செல்லிக் கொண்டு வாறாரு... இந்திய படங்களுக்கு பெரிய விருது, இந்திய தேசிய விருது அத முதல்ல வாங்க try பண்ணலாமே...

ஏப்பு தரைய விட்டுப்புட்டு ஆகாயத்தில போய் விவசாயம் பண்ண கணவு கண்டுக்கிட்டு... எங்களுக்கும் பீதிய கௌப்புறீங்க.....


Mr Sarath you are a good and handsome hero.... mean time don't imagine un wanted things.....

Sunday, March 14, 2010

ஏண்டா ஏன்.....

ஏண்டா ஏன்..... 
நல்லா கெளப்புறாரு பீதிய...


நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் நித்தியானந்தா.


இதுக்கு முதல் 


ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார்.
'ஆனால் சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை..இதுக்கும் முதல் 


என் மீதும், எனது ஆசிரமம் மீதும் சுமத்தப்பட்ட, சுமத்தப்பட்டு வரும் புகார்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.


அடியேய் வேலையை காட்டிப்புட்டு... ஒளிச்சிருந்து கதையா விடுறா..... 

Saturday, March 13, 2010

Chocolate ரே Box சா இருந்தா எப்புடி

Box க்குள்ள Chocolate இருக்கலாம் ஆனா Chocolate ரே Box சா  இருந்தா எப்புடி...


Thursday, March 11, 2010

உலகின் No 1 கோடீஸ்வரர் Carlos Slim

உலகின் No 1 கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெறுகிறார் மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம், 70 yrs (Carlos Slim).

இவரது Specialties
ஒரு சாதாரண பெட்டிக் கடைக்காரராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்
இப்போது மெக்ஸிகோவின்
King of Telecommunication Industry
கோட் சூட் Very Rare
இவர் எளிதில் நம்பாதது Computers
நம்புவது Papers, Notebook and Written Filing 
First No 1 billionaire from 3rd World Country  
சொத்து மதிப்பு 53.5 billion US dollars 
(Last 12 months earnings $18.5 billion dollars)  

அடுத்த இடங்கள்
#2-Bil Gates, 54 yrs (USA) 
Chairman of Microsoft Corp.
Total Assets-53 billion US dollars 
(Last 12 months earnings $13 billion dollars)


#3-Warren Buffett, 79 yrs (USA) 
Chairman of Berkshire Hathaway Inc.
Total Assets-47 billion US dollars 
(Last 12 months earnings $10 billion dollars)
#4-Mukesh Ambani, 53 yrs (India) 
Chairman Reliance Industries
Total Assets-29 billion US dollars 
#5- Lakshmi Mittal, 59 yrs (India) 
Chairman & CEO of Arcelor Mittal
Total Assets-28.7 billion US dollars 
#6-Lawrence Joseph Ellison, 65 yrs (USA) 
CEO, Oracle Corporation
Total Assets-28 billion US dollars
#7-Bernard Arnault, 61 yrs (France) 
Chairman & CEO, LVMH
Chairman, Christian Dior SA
Total Assets-27.5 billion US dollars
#8-Eike Batista, 52 yrs (Brazil) 
Mining & Oil
Total Assets-27 billion US dollors
#9-Amancio Ortega, 73 yrs (Spain) 
Fashion & Retail
Total Assets-25 billion US dollars
#10-Karl Albrecht, 90 yrs (Germany) 
Supermarkets
Total Assets-23.5 billion US dollars
நாயை இழந்து தவிர்க்கும் நமீதா

நமீதா சூரத்திலிருந்தபோது வளர்த்த செல்ல நாய் கூஃபி. சென்னையில் நமீ குடியேறியதும் கூடவே அழைத்து வந்துவிட்டார்.

கூஃபிக்கு சில மாதங்களுக்கு முன் வாத நோய் தாக்கிவிட, உயர்தர சிகிச்சை அளித்து வந்தார் நமீதா. ஆனாலும் நேற்று கூஃபி இறந்துவிட்டது.

இதனால் பெரும் சோகத்துக்கு ஆளான நமீதா, நேற்று முழுவதும் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாராம். பின்னர் மும்பையிலுள்ள தனது பெற்றோரைப் பார்க்க கிளம்பிச் சென்று விட்டாராம். 

கூஃபி இறந்ததை என்னால் தாங்க முடியவில்லை. (ஐயோ நமீ நீங்க ரொம்ப பாவோம்)
என்ன இருந்தாலும் நமீதாவுக்கு ரொம்ப பெரிய மனசு மட்டுமல்ல, இளகிய மனசும் கூடத்தான்...

Wednesday, March 10, 2010

தம்பிக்கு நொந்த ஊரு

தம்பிக்கு எந்த ஊரு

ஐயோ என்ன காப்பாத்துங்க

ஐயோ காப்பாத்துங்க 

ஐயோ என்ன காப்பாத்துங்க

ஐயோ என்ன காப்பாத்துங்க 

ஐயோ என்ன காப்பாத்துங்கங்ங்ங்ங்.........


என்ன மூச்சு பேச்ச காணல்ல..... முடிஞ்சு போச்சா.....

என்பா தம்பிக்கு நொந்த ஊரு பார்த்துட்டு மட்சுக்கு வந்தநீ....

படத்துல ட்விஸ்ட் இருக்கும், ஆனா ட்விஸ்ட்ல பார்த்த படம் என்றா இது தாண்ட சாமி

நிச்சயம் தம்பிக்கு நொந்த ஊரு தாண்டியோவ்....

சுளையா கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்றாரு

மகளீர் இட ஒதுக்கீடு பற்றி கருணாநிதியின் கணக்கு ....
இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்த பழத்தினுடைய ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவதுதான் உள்ஒதுக்கீடு. (ஆரம்பிச்சிட்டாரு)  இப்போது நமக்கு பழம் கிடைத்திருக்கிறது. (நமக்கு என்றா அவருக்கு) மகிழ்ச்சி அடைவோம். இனி யார் யாருக்கு எத்தனை சுளைகள் என்பது பற்றி தேவைப்படும்போது முடிவு செய்வோம் (ஆக்கா கணக்கு பண்ணிட்டாரு) என்று கூறியுள்ளார் முதல்வர்.

இதேபோல மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர் தந்தி ( ஏன்பா இலங்கை பிரச்சின முடிஞ்சு போச்சு எண்டு யாரவது சொல்லுங்கப்பா, மனுஷன் தந்தி அடிக்கிறதா நிப்பாட்டட்டும் ) அனுப்பியுள்ளார்.இப்ப என்னடாண்டடா குடும்பத்துக்கு எத்தனை சுளை தேவைப்படும் என்று நீங்களே கணக்கு பாருங்க...

Monday, March 8, 2010

உலகின் கவனத்தை ஈர்த்தவை - March 08, 2010

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா

ஒவ்வொரு குழந்தையையும் பத்து மாதம் கருவறையில் சுமந்து, இவ் உலகத்தைப் காட்டுபவள் தாய் என்னும் பெண்

sivany.blogspot.com உலக பெண்களுக்கு தனது அனைத்துலக பெண்கள் தின வாழ்த்துக்களைச் தெரிவித்துக் கொள்கின்றது.

இன்றைய இந்த தினத்தில் உலகின் கவனத்தை ஈர்த்தவை....

கதரின் பிக்லோ, பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சிறந்த இயக்குநருக்கான ஒஸ்கர் விருதினைப் பெற்றுள்ளார் .

ஒஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்ற முதல் பெண் கதரின் பிக்லோதான் என்பது, பெண்கள் தினமான இன்று அனைத்து பெண்களையும் பெருமைப்படுத்தும் ஓர் விடயமாகும்.

சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், அவை தி ஹர்ட் லொக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை வியக்க வைத்தது.

இதேவேளை, ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் விருது கிடைக்காத அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது! (நீங்கதானே முன்ன சொன்னீங்க கதரீன் விருதுக்கு பெருத்தமான நபர் தான் என்று... இப்ப என்ன...பெருமைப்படுங்க உங்க முன்னாள் மனைவியும் இன்னாள் நன்பியும் தானே..)

அடுத்தது...

முற்று முழுதாக பெண்களால் இயக்கப்பட்ட விமானமொன்று இன்றைய தினம் சென்னையிலிருந்து கொழும்பிற்குப் பறந்து வரலாற்றில் சிறப்பு பதிவை மேற்கொண்டுள்ளது.

பிரதான விமானி தீபா மேத்தா, உதவி விமானி சோனியா ஜெயின், பணிப்பெண்கள் ராஜானி, பிருந்தா, தன்யா பிரசன்னா, யாமினி ஆகியோரடங்கிய இந்தக் குழுவினர் இன்று மதியம் 12. 30இற்கு சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை இயக்கியதாகவும் இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்ததாகவும் தெரியவருகின்றது.


சற்று ஏமாற்றமான விஷயம்.....

சர்வதேச மகளிர் தினமான இன்று இந்தியாவில் பெண்களுக்கு 33.33 வீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்நது. இருந்தாலும் அது பல குழப்பங்களுக்கு மத்தியில் அதற்கான வாகெடுப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சோனியா காந்திக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக செற்தி... (இருக்காதா பின்ன)
Copyright 2011
ஏஞ்ஜல்

Powered by
Free Blogger Templates