Posts

Showing posts from April, 2010

நதி

Image
நதி எங்கே போகிறது கடலைத் தேடி....என்ற வரி எமது வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் நதி போல் இருக்க வேண்டும். நதியின் செயற்பாட்டைப் பார்த்தால், அதன் இலக்கு கடலைச்சென்றடைவதுதான். நதி கடலைச்சென்றடையும் வரை என்னென்ன தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து கடலைச் சென்றடைகின்றது.. அந்நதி எவ்வாறு தனது குறிக்கோளில் கவனமாக இருந்து இலக்கை அடைகின்றது. இலகு  பொருட்களை  அடித்துச் சென்றுவிடுகின்றது, வலிமையன பொருட்கள் எனின் அதைவிட்டு விலகி வளைந்தோடுகின்றது அல்லது மேவிப்பாய்கின்றது. இது எமது இலட்சியங்களை அடைவதற்கு எடுத்துக்காட்டு. அதேவேளை செல்லும் வழியில் தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் வழங்கிச் செல்கின்றது. அத்தோடு தன்னுள் பல உயிரினங்களையும் வாழ வைக்கின்றது. அதுபோலவே நாமும் இலக்கை அடையும் மட்டும் முயற்சி செய்து நம்மால் இயன்ற நன்மைகளையும மற்றவர்களுக்கு செய்தால் வாழ்வு செழுமையாக அமையும்

அழகு.....

குழந்தைகள் என்றாலே அழகுதான்......மனிதக் குழந்தைகள் மட்டுமல்ல .... உயிரினங்கள் எல்லாவற்றின் சிறிய பருவமும் மிக அழகானது என்பதற்கு இந்த ஒளிப்பதிவு எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது....