Posts

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

Image
சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது பாடலின் மெட்டு  எம்மை வசீகரிக்க வைப்பதோடு அதன் கவிநயத்தையும் சேர்த்து ரசிக்க வைப்பது என்பது கவிஞரின் கையில் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர்  போன்றவர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. ஏனெனில் பாடல் வரி நன்றாக இருந்தாலும் இசை அதனை மேவினால் ,அல்லது ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலோ இல்லையெனில் பாடகர்கள் சரியாக உச்சரிக்காமலோ இருந்தால் எப்படி பாடல் வரிகளை ரசிப்பது? எனவே அனைத்து விடயங்களும் ஒன்றுகூடியதாக இருக்கும் பாடல்களில் பல விந்தைகளைப் பாடலாசிரியர்கள் படைத்திருக்கின்றார்கள்.
மதன் கார்க்கி இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நன்மை. ஏனெனில் மிகவும் அழகாகவும் , வித்தியசமாகவும் ,புதுமை நிறைந்த வகையிலலும் எழுதுவது மட்டுமல்ல தமிழ் , தொழில்நுட்பம் , பொறியியல் . விஞ்ஞானம் எனப் பல விடயங்களையும் மக்கள் ரசனையையும் எழுத்துக்குள் கொண்டுவரத் தெரிந்தவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் விட எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை அவரது செவ்விகளிலிருந்து அறிய முடிகின்றது. 
காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இவரின் ஒரு பாடல் 'அழைப்பாயா அழைப்பாயா' -  இதில் ஒர…

Raagaswarangal_Aug_22_2011

Tamil Star வானொலியில் August 22 அன்று சிவானி தொகுத்து வழங்கிய ராகஸ்வரங்கள் நிகழ்ச்சி

ராகம் ஹம்சத்வனிPaattum Pathamum_Aug_22_2011

Tamil Star வானொலியில் August 22 அன்று சிவானி தொகுத்து வழங்கிய பாட்டும் பதமும் நிகழ்ச்சி


என்னென்று சொல்ல..எப்படிச் சொல்ல.. எங்களுக்காகவும் பேசுங்களேன்.....

அன்னையர் தினம்

Image
உலகில் எதற்கும் ஈடிணை அற்றது அன்னையின் அன்பு ......
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

சுறா

Image
விஜயின் 50வது திடைப்படம் சுறா. 50வது திடைப்படம் என்றவுடன் எதிர்பார்ப்பு வைத்தது எமது பிழை . என்ன நினைத்து படம் எடுக்கின்றார்களோ தெரியவில்லை . விஜய் நடித்தால் படம் ஓடும் என்று நம்பி எத்தனை நாளுக்குத்தான் படம் எடுப்பார்களோ ?

பொதுவாக நல்ல படங்கள் வருவதை விஜய் போன்ற நடிகர்கள் கவனிப்பதில்லையா..... இல்லை கண்டும் காணாமல் இருக்கின்றார்களா....கதாநாயகன் என்றால் என்ன என்றாவது தெரியுமா ......

மொத்தத்தில் சுறா படத்தில்
"வடிவேல் மட்டும் இல்லையென்றால் சுறாவை பூனை தூக்கிக்கொண்டு போயிருக்கும்" 
வடிவேலும் எவ்வளவுக்குத்தான் தாக்குப்பிடிப்பது ..... அது தான் சுறாவை பூனை தூக்காமல் இருக்க ரசிகர்கள் பால் பாலா வார்க்கிறார்களோ என்னவோ ......

நதி

Image
நதி எங்கே போகிறது கடலைத் தேடி....என்ற வரி எமது வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் நதி போல் இருக்க வேண்டும். நதியின் செயற்பாட்டைப் பார்த்தால், அதன் இலக்கு கடலைச்சென்றடைவதுதான். நதி கடலைச்சென்றடையும் வரை என்னென்ன தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து கடலைச் சென்றடைகின்றது.. அந்நதி எவ்வாறு தனது குறிக்கோளில் கவனமாக இருந்து இலக்கை அடைகின்றது. இலகு  பொருட்களை  அடித்துச் சென்றுவிடுகின்றது, வலிமையன பொருட்கள் எனின் அதைவிட்டு விலகி வளைந்தோடுகின்றது அல்லது மேவிப்பாய்கின்றது. இது எமது இலட்சியங்களை அடைவதற்கு எடுத்துக்காட்டு. அதேவேளை செல்லும் வழியில் தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் வழங்கிச் செல்கின்றது. அத்தோடு தன்னுள் பல உயிரினங்களையும் வாழ வைக்கின்றது. அதுபோலவே நாமும் இலக்கை அடையும் மட்டும் முயற்சி செய்து நம்மால் இயன்ற நன்மைகளையும மற்றவர்களுக்கு செய்தால் வாழ்வு செழுமையாக அமையும்