ஷாருக்கானின் உலக மகா லட்சியம்

ட்விட்டரின் (Twitter) பின்தொடருவோர் எண்ணிக்கையில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசிதரூரை மிஞ்ச வேண்டும் என்பது தான் ஷாருக் கானின் தற்போதைய லட்சியமாம்.

ட்விட்டர் சமூக வலையமைப்பு சேவையில் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் தான் இணைந்தார். அவரின் நண்பர் இயக்குநர் கரண் ஜோகர் மூலம் இந்த வலையமைப்பில் சேர்ந்தார் ஷாருக்கான். (இப்பதான் இவருக்கு தெரிஞ்சிருக்கு)

ட்விட்டருக்குள் நுழைந்த 40 நாட்களுக்கு உள்ளாகவே சுமார் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 565 பின்தொடருவோரை (Followers) பெற்று விட்டார்.

ஆனால், வெளியுறவுத் துறை இணை அமைச்சரான சசிதரூர் 6 லட்சத்து 61 ஆயிரத்து 456 பின்தொடருவோரை கொண்டுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் தான் சசி தரூரை விட அதிக பெற்றுவிடுவேன் என ஷாருக்கான் கூறியுள்ளார்.

ரொம்பமுக்கியம், ஆரோக்கியமான போட்டி என்று ஷாருக்கானுக்கு நினைப்பு?சசி தருர் ஆரோக்கியமான விடயங்களை சொல்க்கொண்டு இருக்கிறாரு, நீங்க என்ன சொல்லுவீங்க Mr. ஷாருக். என்னோட படத்தை பாருங்க, அதுவும் தியேட்டருக்கு போய்பாருங்க என்று சொல்லுவீங்க..

ஒன்று நிச்சயம் கட்டவுட்டுக்கு பாலூட்டி மன்னிக்கவும் பாலூத்தி மாலைபோடும் ரசிகர்கள் இருக்கும் வரைக்கும்.. நீங்க ஹாய இருப்பீங்க...

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்