இலங்கை அரசியல் அரங்கேற்றம் 2010

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறதென சம்பந்தனிடம் கேட்ட போது இதற்குப் பதிலளித்த அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் விநாயகமூர்த்தி தமது பட்டியலில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
*** சம்பந்தருக்கு மீசையில்லை, அதனால் மண்ணும் ஒட்டாது
*************


எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் யாழ் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட இருக்கிறது
*** அடங்காத் தமிழன்
*************


எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கருணாவிற்குப் பொருத்தமான பதவியொன்றைத் தருவதாக மகிந்த றாஜபக்ச உறுதியளித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*** அப்பாடா இது போதும், இனி நிம்மதியா நித்திரை வரும்
*************


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எதிர்ப்பு
*** எங்காவது ஒரு இடத்தில் நிலையா இருங்கப்பா
*************


ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையைஅவர் நிராகரித்திருப்பதாக மனோ கணேசன் 
தெரித்துள்ளார்
*** எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யவேண்டியதுதானே
*************


தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளை பிரிப்பதற்கு அரசாங்கம் பல சதித் திட்டங்களில் இறங்கியுள்ளதாகவும் அதன் ஒரு கட்டமாக பல சுயேச்சைக் குழுக்களை களத்தில் இறக்குவதற்கு பெருமளவு பணத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்
*** எனக்கும் பாராளுமன்றத்தை காட்டுங்கப்பா 
*************


தமிழரின் ஒற்றுமையைக் காப்பதற்காகவே தாம் எதுவித விமர்சனங்களையும் முன்வைக்காமல் இதுவரை இருந்ததாகவும் எனினும் தற்போது விமர்சனங்களுக்கான காலம் வந்துவிட்டது. பத்மினி சிதம்பரநாதன்
*** ஏன் பொறுமை, அள்ளிவிட வேண்டியது தானே 


இன்னும் வருவோம்....

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்