அண்டக்காக்கா பனைமரத்துக்கு மேலாக பறக்க பனம்பழங்கள் அனைத்தும் கீழே விழுந்ததாம்

ரஜினி-அஜீத் துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன் தெரிவித்துள்ளார்.

ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.

'எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.

கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்கு வதை ஏற்க மாட்டோம்.

கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்...', என்றார்.

திருவாளர் வி.சி.குகநாதன் அவர்களே, உண்மையைச் சொல்லுங்கள் சும்மா கிடந்த சங்கை ஊதி ஊதி பெரிதாக்கியது யாரு... உங்களுக்கு போதுமான அளவு Publicity கிடைத்து விட்டது. இப்பொழுது Mr. பிதாமகன் சொன்னார் என்று, போராட்டங்கள் எல்லாம் கைவிடப்பட்டதாக அறிவித்திருக்கிறீர்கள். உங்கள் கதையைப்பார்த்தால் அண்டக்காக்கா பனைமரத்துக்கு மேலாக பறக்க பனம்பழங்கள் அனைத்தும் கீழே விழுந்ந கதையாக இருக்கின்றது. 

ஆனால் ஒன்று நிச்சயம், Mr. பிதாமாகனுக்கு நாக்கு புரளும் காலம் நெருங்கிவிட்டதாக செய்தி: தப்பித்தவறி கண்மணி குகநாதா நீ இன்றே தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று அறிக்கை வரப் போகின்றது. பார்த்து..........

நாங்கள் ஆப்புகளுடன் இருக்கின்றோம் நீங்களா வந்து.....

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

அல்கா அஜித்

தெலுங்கில் விண்ணைத்தாண்டி வரும்