2010 ம் ஆண்டு ஒஸ்கார் விருதுகள் சுவாரசியம்

2010 ம் ஆண்டு ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இன்னும் 10 நாட்களில் அதாவது மார்ச் 7ம் திகதி வழங்கப்படவிருக்கின்றது. கடந்த வருடம் ஒஸ்கார் விருதுகள் பற்றி பெரும்பாலும் சகல தமிழர்களும் அறிந்திருந்தார்கள் என்று தான் கூறவேண்டும் ஏனென்றால் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஹோலிவூட் திரைப்படமான ஸ்லம்டோக் (Slumdog Millionaire) மில்லியனர் திரப்படத்திற்கு இசையமைத்து, இரண்டு ஒஸ்கார் விருதுகளைப்ப பெற்றிருந்தார், அது பின்னணி இசைக்கும், அத்திரைப்ப் பாடலான ஜெய்ஹோவிற்கு (Jaiho) சிறந்த பாடலுக்குமான விருதும் வழங்கப்பட்டது.

ஆனால் இவ்வருடம் ஒஸ்கார் விருது வழங்கும் விழா மற்றுமொரு வகையில் சிறப்புறப் போகின்றது. இம்முறை கடும் போட்டி 'அவதார்' (Avatar) மற்றும் 'த ஹேட் லொக்கர்' (The Hurt Locker)என்ற திiரைப்படங்களுக்கிடையில் இருக்கின்றது. இந்த இரண்டு திரைப்படங்கள் என்று சொல்வதிலும் பார்க்க இத் திரைப்படங்களின் இயக்குனர்களான ஜேம்ஸ் கமரூன் (James Camaron) மற்றும் கதரீன் (Kathryn)ஆகியோருக்கிடையில் நிலவும் போட்டிதான் கடும் சுவாரசியமானது. ஏனென்றால் ஜேம்ஸ் கமரூனின் முன்னாள் மனைவிகளுள் ஒருவர் தான் இந்த கதரீன் (ஜேம்ஸ் கமரூனுக்கு 3 மனைவிகள்). 1989 தொடக்கம் 1991 வரை இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

உச்ச போட்டியில் இருக்கும் இத்திரைப்படங்களில் ஜேம்ஸ் கமரூனின் அவதார் திரைப்படம் 237 மில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்டு இன்றைய திகதிவரை (பெப்ரவரி 25, 2010) வரை 1.69 பில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளது. இத்திரைப்படத்தில் பிரதானமான விடயம் என்று சொன்னால் அது நிச்சயமாக கிராபிக்ஸ் தான். ஆனால் கதரீனின் 'த ஹேட் லொக்கர்' திரைப்படமோ ஈராக் யுத்தத்தில் பங்கு கொண்டுள்ள ஒரு குண்டு செயலழக்கும் வீரனின் வாழ்கையைப்பற்றியது. இத் திரைப்படத்திற்கான மொத்த செலவு வெறும் 11 மில்லியன் டொலர்களே, இது 17 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியிருக்கின்றது. இருந்தாலும் 'த ஹேட் லொக்கர்' தரமான திரப்படமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது.

இதெற்கெல்லாம் ஒருபடி மேலே உள்ளது ஜேம்ஸ் கமரூன் சொல்லியிருக்கும் ஒரு விடயம், என்னவென்றால் 'உண்மையில் விருதுக்குரிய ஒரு படமாக 'த ஹேட் லொக்கர்' இருப்பதோடு, விருதுக்கு பொருத்தமான தகுதியான இயக்குனராக கதரீனும் உள்ளார்' என ஜேம்ஸ் கமரூன் தனனு முன்னாள் மனைவியை பராட்டியிருக்கின்றார்.

எது எப்படியோ சிறந்த இயக்குனருக்கான விருதினை கதரீன் பெற்றார் என்றால் ஒஸ்கார் வரலாற்றில் சிறந்ந இயக்குனருக்கான விருதுபெற்ற முதல் பெண்மணியாக திகழ்வார்.

மீண்டும் முழுமையான விருதுப்பட்டியலுடன் மார்ச் 7ம் திகதி நள்ளிரவு சந்திப்போம்..

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்