வன்கூவரில் நடந்து கொண்டிருக்கும் குளிர்கால ஒலிப்பிக் 2010, இந்திய நடனமாடும் அமெரிக்க ஜோடிவன்கூவரில் நடந்து கொண்டிருக்கும் குளிர்கால ஒலிப்பிக் 2010 இல் நேற்றுமுன்தினம் நடந்த ஐஸ் நடனத்தில் (Ice Dance) கனேடிய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. வெள்ளிப் பதக்கம் அமெரிக்க ஜோடிக்கு கிடைத்தது. இதில் முக்கிமான விடம் என்னவென்றால், வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்க ஜோடி தங்களது போட்டியின் ஒரு சுற்றில் ஹிந்திப் பாடல்களை தெரிந்தெடுத்து அதற்கு நடனம் ஆடியது அற்புதமாக இருந்தது என்று சொல்வதிலும் பார்க்க மிகப் பிரமாண்டமாக இருந்தது என்று சொல்லலாம்.

ஆட்டத்தில் தொடரும் ஜோடி இந்தியன் கிராமிய நடனம் (Folk Dance)ஆடப்போகின்றார்கள் என்று அறிவித்தல் வந்த பின்பு, அந்த ஜோடி உண்மையில் தேவதாஸ் ஹிந்தித் திரைப்பரட்தில் இருந்து ஷிரேயா ஹோசலின் இரண்டு பாடல்களுக்கு பரத நாட்டிய அசைவுகளைப் போல் ஆடியது, கிராபிக்ஸ்சா அல்லது நிஜமா என்று நம்ப முடியாமல் இருந்நது. மற்றுமொரு சிறப்பம்சம் அந்த அமெரிக்க ஜோடி இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்திருந்தது. சரி சரி இன்னம் நான் ஒன்றும் விளக்கம் செல்லவில்ல நீங்களே வீடியோவை பாருங்க...
Video

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்