மீண்டும் இணையும் கமல்ஹாசன் மாதவன்


யாவரும் கேளிர் படத்தில் கமல்ஹாசனுடன் மாதவனும் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் சேர்ந்து அன்பே சிவம் என்ற படத்தில் நடித்திருந்தனர். 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல், த்ரிஷா நடிக்கவிருக்கும் படம் யாவரும் கேளிர். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறார். முழு நீள நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகிறது. 

இந்தியில் தீன் பத்தி, தனு வெட்ஸ் மனு, சன்கிளாஸ் படங்களில் மாதவன் நடித்து வருகிறார். குரு என் ஆளு படத்துக்கு பின் தமிழில் அவர் நடிக்கவுள்ள படம் யாவரும் கேளிர். 

மீண்டும் மற்றுமொரு நகைச்சுவை சரவெடிக்கு உத்தரவாதம் என்று நம்மலாமா... ஏனென்றால் K.S.ரவிக்குமாரின் அண்மைய படங்கள் 'ஆதவன்' மற்றும் 'ஜக்குபாய்' உண்மையில் அச்சுறுத்திவிட்டது. 

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

எழுச்சி நாள்

பெப்ரவரி 29, 2010