Posts

82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010)

Image
82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010) Kathryn Bigelow (James Cameroon's ex wife) இன்  The Hurt Locker  சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட, 6 ஒஸ்கார்  விருதுகளைப்பெற்றுள்ளது.  சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கு ஒஸ்கார் விருது பெறும் முதல் பெண்ணாக Kathryn Bigelow தனது பெயரை பதிவு செய்துள்ளார். Best Picture Movie: The Hurt Locker Kathryn Bigelow, Mark Boal, Nicolas Chartier and Greg Shapiro Actor in a Leading Role Jeff Bridges Movie: Crazy Heart Actor in a Supporting Role Christoph Waltz Movie: Inglourious Basterds Actress in a Leading Role Sandra Bullock Movie:The Blind Side Actress in a Supporting Role Mo'Nique Movie: Precious: Based on the Novel 'Push' by Sapphire Animated Film Feature Movie: Up Pete Docter Art Direction Movie: Avatar Rick Carter and Robert Stromberg (Art Direction); Kim Sinclair (Set Decoration) Cinematography Movie: Avatar Mauro Fiore Costume Design Movie: The Young Victoria Sandy Powell ...

82வது ஒஸ்கார் விருதுகள்

Image
82வது ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக இருக்கின்றது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந் நிகழ்வில் தற்பொழுது ஹொலிவூட் திரையுலகத்தின் முக்கியமான நட்சத்திரங்கள் வருகைதந்து கொண்டிருக்கின்றார்கள்.. இன்னும் சற்று நேரத்த்தில் விருது பெறுவோரின் விபரங்களை எதிர்பாருங்கள்... இந்த வேளையில் கடும் போட்டி முன்னாள் தம்பதிகளின் படங்களான அதாவது அவதார் மற்றும் த ஹேட் லொக் படங்களின் இயக்குனர்களான ஜேம்ஸ் கமரூன் மற்றும் கத்தரீனா ஆகியோரிடையே தான் இருக்கும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக்க கொண்டிருக்கின்றன.

96ல் ஓர் அணி 2010 இல் எதிர் அணி

Image
96ல் ஓர் அணியில் விளையாடி உலகக்கிண்ணத்தை வெண்ற அணி, 2010 இல் எதிர் எதிர் அணியில் களம் இறங்கியுள்ளது. நீயா நானா? அதுதான், 96ல் கிரிகற் உலகக்கிண்ணம் வென்ற அணியில் அர்ஜூனா ரணதுங்க, சனத் ஜயசூரிய, ஹசான் திலகரட்ண ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நானும் இருக்கேன், எப்பிடியெல்லாம் ஆடுவன் பாரு..  Sri Lanka v Australia, 3rd Test, Colombo, 3rd day, March 26, 2004 இப்பஇ 2010 இல் சனத் ஆளும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் குதித்துள்ளார் (நீங்கள் குதித்த அந்த குளம் ஆழமுங்களாண்னா) அர்ஜூனா, ஹசான் ஆகியோர் சரத் பொன்சேகாவுடன் இணைந்துள்ளனர். இதுல வெல்லப்போறது யாரு? போர்ம்மே இல்லாவிட்டாலும் அணியில் தொடர்ந்து இருக்கும், இனிமேலும் தொடர்ந்து இருக்கப்போகும் சனத்தா? இல்ல வெற்றி பெறாமலே வெற்றிக் கிண்ணச் சின்னத்தில் போட்டிபோடும் அர்ஜூனா, ஹசானா?... இப்படியும் வணக்கம் சொல் லலாம் இது எங்க ஏரியா... அர்ஜூனா Bowling சனத் Batting ஹசான் Keeper , ஒருவேளை சனத் Ball Miss   பண்ணினா Stump ல Out ஆ இதெல்லாம் ஜெயிச்ச பிறகு ராஜா... பயபுள்ளய்க கவுத்துப்புட்டாய்க...

தலைய புதுப்பிக்கபோறாராம் கௌதம்

Image
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்து இருக்கிறேன் என்று கூறுகின்றார் கௌதம்..... உண்மையாவா...இப்பிடியெல்லாம் சொல்லப்படாது... படம் பார்த்த அத்தனை பேரும், எங்க வாழ்க்கையில் நடந்த மாதிரி இருக்கிறது என்கிறார்கள் (அப்ப பார்க்காதவங்க என்ன மாதிரி..). அத்தோட, இந்த படம் நான் சந்தித்த இரண்டு பேரின் கதை. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யார்? என்று சொல்ல மாட்டேன். சொன்னால், பிரச்னை ஆகிவிடும். (ஆக இந்தமுறை இங்கிலிஷ் படத்த சுடல்ல... அந்த ரெண்டு பேருக்கும் இந்த விசயம் தெரியுமோ....) அந்த காதலர்களின் கதைக்குள், என் கற்பனையையும் சேர்த்து படமாக்கி இருக்கிறேன். என் அடுத்த படத்தில் அஜீத் நாயகன் (அட நம்ம கொல சீ.. தல) தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். அதையடுத்து, சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன். ஹாரீஸ் ஜெயராஜுடன் மீண்டும் இணையும் எண்ணம் இல்லை. (அப்ப விஜய் TV Award Function ல பொய் சொல்லியிருக்கிறிங்க ரெண்டு போரும்) விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு வேறு மாதிரி தெரிந்தது போல், என் அடுத்த படத்தில் வேறு ஒரு அஜீத் வெளிப்படுவார் என்றார்...

கதவைத்திற கமாரா வரும்

Image
'கதவைத் திற காற்று வரும்' என்ற நித்தியானந்தம் சூவாமிக்கு... கதவைத்திற கமாரா வரும் என்று தெரியாமல் போய்விட்டதே... அய்யோ பாவம்... இவரை நிஜ சாமியார் என்று நம்பி தொலைக்காட்சிகளும் சஞ்கிகைகளும் எதோ விவேகானந்தர் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்தாய்க...இப்ப அவிங்களே அவிழ்த்து Sorry அவிட்டு விட்டாய்க... இது ஒருபக்கம் இருக்க, அந்தாள நம்பித்திரிந்த கூட்டத்திற்கு சுவாமி வச்சாருல்ல ஆப்பு.. 32 வயது ஆசாமிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள,. 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள், அப்பவே யோசிச்சிருக்கனும் இது எங்கயோ பிழைக்கப்போகுது என்று.. 'உலகின் ஆன்மீக ஒளி நானே' என்று கூறி வந்த நித்யானந்தா. அமெரிக்க இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவர் வேற.... இப்ப எல்லாக் குட்டும் அம்பலமாக சாமி ஹரித்வாருக்கு சென்று தலைமறைவு... இது தேவையா Mr.நித்து.. இதெல்லாம் இருக்க SUN TVக்கு ஒரு குட்டு.. R என்ற முதல் எழுத்தைக் கொண்ட நடிகை என்றால்.. சாதாரண ரசிகன் R என்ற முதல் எழுத்துக் கொண்ட எல்லா நடிகையையும் அல்லவா சந்தேகப்பபட்டிருப்பான். ஏன் அய்யா வீணா பொம்பளங்க பாவத்த தேடிக் கொள்றீங்க.. அமெரிக்காவிலே இப்...

திகைப்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்

Image
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இதுவரை உயிரிழந்திருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஜார்கண்டை சேர்ந்த கௌதம் குமார் என்ற மாணவர் சாலை விபத்தில் படுகாயமடைந்து அண்ணாமலை மருத்துக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது நிலைமை மோசமானதால் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவருடன் படிக்கும் சக மாணவர்கள் 500 பேர், குறிப்பாக வட இந்திய மாணவர்கள், சரியான சிகிச்சை அளிக்காததால் தான் கௌதம் பலியானதாகக் கூறி, அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை சூறையாடினர். இதைத் தொடர்ந்து போலீசார் தடியடியில் மாணவர்கள் தப்பியோடியபோது, பிகாரை சேர்ந்த சுனித் குமார் என்பவர் பாலமான் ஓடையில் தவறி விழுந்து பலியானார். இதனால் நிலமை இன்னும் மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து, பதற்றம் அதிகரிக்கவே பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியும் விடுதியும் மூடப்பட்டு மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந் நிலையில் இன்று பாலமன் ஓடையில் இருந்து மேலும் 2...