160 வருடத்தில் முதன்முறையாக Toronto வில் நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு இல்லை


இன்று நவம்பர் மாதத்தின் இறுதி நாளாக இருக்கின்ற போதும் Toronto வில் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் கூட பனிப்பொழிவு ஏற்படவில்லை. இது கடந்த 160 வருடத்தில் முதன்முறையாக ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சராசரியாக நவம்பர் மாதத்தில் Toronto வில் 7.6 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Toronto வில் இம்முறை சற்று வித்தியாசமான காலநிலை நிலவுவதோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பனிபொழிவு ஏற்படுவதற்கு 60 வீதமான சாத்தியங்கள் தென்படுவதாகவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

அல்கா அஜித்

Tamil Eelam