Posts

என்னென்று சொல்ல..எப்படிச் சொல்ல.. எங்களுக்காகவும் பேசுங்களேன்.....

அன்னையர் தினம்

Image
உலகில் எதற்கும் ஈடிணை அற்றது அன்னையின் அன்பு ...... அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

சுறா

Image
விஜயின் 50வது திடைப்படம் சுறா. 50வது திடைப்படம் என்றவுடன் எதிர்பார்ப்பு வைத்தது எமது பிழை . என்ன நினைத்து படம் எடுக்கின்றார்களோ தெரியவில்லை . விஜய் நடித்தால் படம் ஓடும் என்று நம்பி எத்தனை நாளுக்குத்தான் படம் எடுப்பார்களோ ? பொதுவாக நல்ல படங்கள் வருவதை விஜய் போன்ற நடிகர்கள் கவனிப்பதில்லையா..... இல்லை கண்டும் காணாமல் இருக்கின்றார்களா....கதாநாயகன் என்றால் என்ன என்றாவது தெரியுமா ...... மொத்தத்தில் சுறா படத்தில் " வடிவேல் மட்டும் இல்லையென்றால் சுறாவை பூனை தூக்கிக்கொண்டு போயிருக்கும்"  வடிவேலும் எவ்வளவுக்குத்தான் தாக்குப்பிடிப்பது ..... அது தான் சுறாவை பூனை தூக்காமல் இருக்க ரசிகர்கள் பால் பாலா வார்க்கிறார்களோ என்னவோ ......

நதி

Image
நதி எங்கே போகிறது கடலைத் தேடி....என்ற வரி எமது வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் நதி போல் இருக்க வேண்டும். நதியின் செயற்பாட்டைப் பார்த்தால், அதன் இலக்கு கடலைச்சென்றடைவதுதான். நதி கடலைச்சென்றடையும் வரை என்னென்ன தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து கடலைச் சென்றடைகின்றது.. அந்நதி எவ்வாறு தனது குறிக்கோளில் கவனமாக இருந்து இலக்கை அடைகின்றது. இலகு  பொருட்களை  அடித்துச் சென்றுவிடுகின்றது, வலிமையன பொருட்கள் எனின் அதைவிட்டு விலகி வளைந்தோடுகின்றது அல்லது மேவிப்பாய்கின்றது. இது எமது இலட்சியங்களை அடைவதற்கு எடுத்துக்காட்டு. அதேவேளை செல்லும் வழியில் தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் வழங்கிச் செல்கின்றது. அத்தோடு தன்னுள் பல உயிரினங்களையும் வாழ வைக்கின்றது. அதுபோலவே நாமும் இலக்கை அடையும் மட்டும் முயற்சி செய்து நம்மால் இயன்ற நன்மைகளையும மற்றவர்களுக்கு செய்தால் வாழ்வு செழுமையாக அமையும்

அழகு.....

குழந்தைகள் என்றாலே அழகுதான்......மனிதக் குழந்தைகள் மட்டுமல்ல .... உயிரினங்கள் எல்லாவற்றின் சிறிய பருவமும் மிக அழகானது என்பதற்கு இந்த ஒளிப்பதிவு எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது....

Making of Avatar

Image
Making of Avatar

ஆப்பு வைச்சுப்புட்டாங்க அண்ணே

Image
இன்றைய மனிதர்களின் மூன்றாவது கைக்கு அதுதாங்க.. Cell Phone களால் அதிக கதிர் வீச்சு வெளிப்படுவதாகவும், அது உடம்புக்கு கேடு விளைவிப்பதாகவும் அவ்வப்போது அறிக்கைகள் வரும், உடனே Cell Phone Company குய்யோ முய்யோ என்று கத்தி அவ்வாறு இல்லை என்று வாதாடுவதேடு, Court Case என்று கொஞ்ச நாள் சலசலப்பை உண்டாக்கி பின்னர் புஸ்வாணமாகி விடுகின்றது. இப்ப என்னாண்ணா அமெரிக்காவை சேர்ந்த இவங்க Environmental Working Group (இவங்களுக்கு என்ன கொலை வெறியோ...)சொல்றாங்க படத்தில இருக்கின்ற பய புள்ளைங்க Dangers பார்ட்டியாம்... பய புள்ளையளுக்கு சனி மாற்றம் சரியில்ல போல.. Ordered by tech expert rank. View by radiation level